#U19WC2024 : ஸ்காட்லாந்து அணியை தோற்கடித்து தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி..!
U19 கிரிக்கெட் உலககோப்பையின் 21வது போட்டியானது இன்று நடைப்பெற்றது.அதில், ஸ்காட்லாந்து அணியும் , தென் ஆப்பிரிக்கா அணியும் மோதியது. அதில், டாஸ் வென்ற தென்னாபிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்த காரணத்தால் ஸ்காட்லாந்து அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.
தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை ஸ்காட்லாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஜேமி டங்க் நாலா பக்கமும் சிதறடித்தார். இவர் சிறப்பாக விளையாடி 90 ரன்கள் எடுத்தார். இவருடன் 4 வது விக்கட்டுக்கு கைகோர்த்த ஸ்காட்லாந்து அணியின் கேப்டனும், விக்கெட்கீப்பருமான ஓவன் கோல்ட் 97 ரன்கள் எடுத்து சதத்தை தவற விட்டார்.
பின் களம் கண்ட எந்த வீரரும் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்க , இறுதியில் அந்த அணி 50 ஓவருக்கு 9 விக்கெட்டை இழந்து 269 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா அணியில் ரிலே நார்டன் 3 விக்கெட்டை எடுத்திருந்தார்.
அதன்பின் 270 என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது தென்னாபிரிக்கா அணி. ஆட்டத்தின் தொடக்கம் முதலே அந்த அணி சரிவை சந்திக்காமல் சிறப்பாக விளையாடியது. அதிலும் தொடக்க வீரராய் களமிறங்கிய ஸ்டீவ் ஸ்டோல்க் மிக சிறப்பாக விளையாடி 37 பந்துகளில் 86 ரன்களை விளாசினார்.
அதன் பின் களமிறங்கிய வீரர்களும் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி வெளியேற அவர்களை தொடர்ந்து திவான் மரைஸ் 80 ரன்கள் எடுக்க தென் ஆப்பிரிக்கா அணி வெறும் 27 ஓவருக்குள் 273 ரன்கள் எடுத்து இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது.