கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு Z+ பாதுகாப்பு ..!
இன்று காலை கொல்லம் மாவட்டத்தில் ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒரு விழாவிற்கு சென்று கொண்டிருந்தபோது அப்பொழுது மாணவர் அமைப்பினர் கருப்பு கொடியை காட்டி Go back என்ற முழக்கங்களை ஆளுநருக்கு எதிராக முழங்கினர். இது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியது, உடனே காரை விட்டு இறங்கிய அவர் போராட்டம் நடத்திவர்களிடம் நேருக்கு நேராக சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் உடனே அருகில் இருந்த டீ கடையில் நற்காலியை எடுத்துக்கொண்டு சாலையோரமாக அமர்ந்தார். அப்போது கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறுகையில், “மாநிலத்தில் சட்ட விரோதத்தை ஊக்குவிப்பவர் மாநில முதல்வர். சட்டத்தை மீறுபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க போலீசாருக்கு அவர் வழிகாட்டுகிறார். இவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது இவர்தான். போலீசாரே போராட்டம் நடத்துபவர்களுக்கு உதவுகிறார்கள் என கூறினார்.
ஜனநாயகத்தை காப்பாற்ற நினைப்பர்வர்கள் மனம் மாற மாட்டார்கள்- மல்லிகார்ஜுன கார்கே..!
மேலும், முதலமைச்சராக இருந்தால் இப்படி பாதுகாப்பு அளிப்பீர்களா..? என்று கேள்வி எழுப்பினார். இதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர். ஆனால், 50-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இருந்தனர் என ஆளுநர் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ராஜ்பவன் தகவல் அளிக்கப்பட்டது. இந்த சம்பவங்களை அடுத்து ஆளுநரின் பாதுகாப்பை மத்திய உள்துறை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கேரள கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு Z+ பிரிவு பாதுகாப்பு ஒதுக்கப்பட்டதாக கேரளா ராஜ்பவன் தெரிவித்துள்ளது.
Union Home Ministry has informed Kerala Raj Bhavan that Z+ Security cover of CRPF is being extended to Hon’ble Governor and Kerala Raj Bhavan :PRO,KeralaRajBhavan
— Kerala Governor (@KeralaGovernor) January 27, 2024
கேரளாவில் ஆளுநருக்கு, அரசுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல் போக்கு உள்ளது. அரசு அனுப்பிய மசோதாக்கள் ஒப்புதல் அளிக்காதது, பல்கலைக்கழக நியமனங்களில் அரசின் தலையீடு போன்ற விஷயங்களால் இந்த மோதல் போக்கு உள்ளது