குடியரசு தினத்தையொட்டி ஆளுநர் தேநீர் விருந்து தொடங்கியது..!
குடியரசு தினத்தன்று மாலை ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து வழக்கமாக வழங்கப்படும். இந்தநிலையில், குடியரசு தினத்தை ஒட்டி முக்கிய பிரமுகர்களுக்கு ஆளுநர் ஆர்.என் ரவி தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த தேநீர் விருத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், நீதியரசர்கள் மற்றும் தொழிலதிபர்கள் உள்ளிட்டோரும் ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அமைச்சர்கள் ரகுபதி, தங்கம் தென்னரசு, மா. சுப்பிரமணியன், சேகர் பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். அதே நேரத்தில் அதிமுக சார்பில் ஜெயக்குமார், பாலகங்காவும் பாஜக சார்பில் கரு. நாகராஜன், பாஜக தலைவர் ஜி.கே மணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும் ஆளுநரின் குடியரசு தேநீர் விருந்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்று உள்ளார்.
மக்களவை தேர்தல் – ஜன28ல் ஆம் ஆத்மி பேரணி!
ஆளுநரின் செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து குடியரசு தினத்தன்று ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விசிக , மதிமுக , மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளனர். ஆளுநர் தேநீர் விருந்தில் முதல்வர், அமைச்சர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் என பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.