கேலோ இந்தியா: தமிழகத்துக்கு ஒரே நாளில் 8 தங்கம்.!
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி தங்கப் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் 8 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஆடவர் மற்றும் மகளிருக்கான கூடைப்பந்து, மகளிருக்கான 200 மற்றும் 800மீ ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், ஆடவருக்கான 200 மற்றும் 400மீ ஓட்டப்பந்தயம், ட்ரிபிள் ஜம்ப் ஆகிய போட்டிகளில் தமிழக வீரர், வீராங்கனைகள் தங்கம் வென்றனர்.
தற்போது, பதக்கபட்டியலில் மகாராஷ்டிரா 26 தங்க பதக்கத்தையும், 23 வெள்ளிப் பதக்கங்களையும், 40 வெண்கலம் பதக்கம் என மொத்தம் 79 பதக்கங்களை வென்று முதல் இடத்தில் உள்ளது.
கேலோ இந்தியா: கூடைப்பந்து போட்டியில் இரு பிரிவிலும் தமிழ்நாடு அணி தங்கம்!
அடுத்தபடியாக, தமிழ்நாடு 25 தங்கம், 12 வெள்ளி, 23 வெண்கலம் என மொத்தம் 60 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. 21 தங்கம், 12 வெள்ளி 29 வெண்கலம் என 62 பதக்கங்களுடன் ஹரியானா 3ஆவது இடத்தில் உள்ளது.