கலைத்துறையில் சிறந்த சேவை.. விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது.!

இன்று நாடு முழுவதும் 75வது குடியரசுதின விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருது, பத்ம விருதுகள் உள்ளிட்ட பல்வேறு விருதுகள் அறிவிக்கப்படும்.
முன்னதாக அரசு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு குடியரசுத் தலைவர் விருதுகள் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலிருந்து 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதுபோக 21 பேருக்கு சிறப்பு விருதுகளும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
நாட்டின் 75வது குடியரசு தினம்..! 80 ஆயுதப் படை வீரர்களுக்கு வீர தீர விருதுகளை வழங்கும் ஜனாதிபதி
இதனை தொடர்ந்து நேற்று, பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதில் மிக முக்கியமாக கடந்த டிசம்பர் மாதம் 28ஆம் தேதி உயிரிழந்த தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. கலைத்துறையில் சிறப்பான சேவை புரிந்ததன் காரணமாக விஜயகாந்த்திற்கு இந்த விருது அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவையை சேர்ந்த வள்ளி ஒயில் கும்மியாட்ட நடனக் கலைஞர் பத்திரப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 87 வயதான அவர் புராணம் மற்றும் இந்திய வரலாறை தனது கலை மூலம் மக்களிடையே பரப்பி வருகிறார் இதற்காக அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமணியனுக்கு பத்ம விபூஷன் விருதும், நடன கலைஞர் வைஜெயந்தி மாலாவிற்கு பத்ம விபூஷன் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஸ் விளையாட்டு வீராங்கனை 37 வயதான ஜோஷ்னா சின்னப்பாவிற்கு பத்மஸ்ரீ விருது, எழுத்தாளர் ஜோ டி குருஸ் அவருக்கு பத்மஸ்ரீ விருது, நாதஸ்வர கலைஞரான சேஷம்பட்டி டி.சிவலிங்கம் அவருக்கு பத்மஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதே போல பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு பத்ம விபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025