சுவாமிக்கு திரை போட்டுருந்தால் வழிபடலாமா ?..இதோ அதற்கான தீர்வு ..!

temple urn

கோவிலுக்கு நாம் சென்று வழிபடும்போது சுவாமி திரை போட்டு மறைத்திருந்தால்  அவ்வபோது நாம் வழிபடலாமா சந்தேகம் பலருக்கும் ஏற்படும் அதைப்பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

வழிபாடும் முறை 

பொதுவாக நம் ஆலயத்திற்கு செல்லும் போது அபிஷேகம் நேரம் அறிந்து செல்வதில்லை .ஒவ்வொரு ஆலயத்திலும் அபிஷேக நேரம் மாறுபடும் அது மட்டுமல்லாமல் பெரிய பெரிய கோவில்களில் அபிஷேக நேரம் விசேஷ நாட்களில் மாறுபடும் என அங்கேயே எழுதி இருப்பார்கள். இது அனைவருக்குமே தெரிந்திருக்கும் என கூற முடியாது. ஆனால் ஒருவேளை நாம் கோவிலுக்கு சென்று விட்டு சுவாமி திரையிடப்பட்டுள்ளார் என்றால் நிச்சயமாக நாம் காத்திருந்து  தரிசனம் செய்வது தான் உத்தமம். ஆனால் ஒரு சிலர்  கோவிலுக்கு அவசர அவசரமாக சென்று தரிசனம் செய்து திரும்புவார்கள் அவ்வாறு செய்யக்கூடாது.

அப்படி அவசரமாக செல்ல வேண்டும் என்றால் கோவிலுக்கு வெளியே சென்று மூலவருக்கு மேல் உள்ள கோபுரத்தில் விமான கலசம் அனைத்து ஆலயத்திலும்   நிச்சயம் இருக்கும் அந்த கலசத்தைப் பார்த்து வேண்டுதல் செய்துவிட்டு செல்லலாம். கடவுளை நாம் பார்க்க நினைத்தால் பார்க்க முடியாது அவர் நினைத்தால் மட்டுமே பார்க்க முடியும் ஆகவே அடுத்த முறை வரும் பொழுது தங்களைப் பார்க்க  வாய்ப்பு வழங்க வேண்டும் என அக்கடவுளிடம் வேண்டி செல்ல வேண்டும் .ஆகவே கடவுளை வணங்க வேண்டும் என்றால் அதற்கான நேரம் செலவிட்டு மகிழ்ச்சியாக தரிசனம் செய்ய வேண்டும். இப்படி தரிசனம் செய்தால் மட்டுமே மனதிற்கு நிம்மதியும் தரிசனம் செய்ததற்கான பலனையும் நம்மால் பெற முடியும்.கோவிலுக்கு செல்வதே மன அமைதிக்கும் நேர்மறை ஆற்றல் நம் உடலுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்கு தான் இதை  நினைவில் வைத்து கொண்டு வழிபாடு செய்வதே சிறந்ததாகும் .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்