விநாயகர் சிலைகளை கரைக்க இனி கட்டணம்.. அதிரடி உத்தரவு..!
![Ganesha](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/01/Ganesha.webp)
விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு நீர் நிலைகளில் விநாயகர் சிலை கரைப்பதை தடுக்க கோரி சென்னை சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் “பிளாஸ்டர் ஆப் பாரிஸால் சிலைகளை தயாரிக்க மதுரை கிளை தடை விதித்துள்ளது குறித்தும், விரிவான விளம்பரங்கள் கொடுத்தால் மட்டுமே இதுபோன்ற சிலைகள் செய்யாமல் தடுக்க முடியும் என கூறினார்.
மேலும் விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களுக்கு முன் நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக , முன்கூட்டியே நடவடிக்கை எதுவேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதுக்குறித்து பதிலளித்த தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் முன்கூட்டியே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளை கடைபிடித்து வருவதாக தெரிவிக்கப்பட்டது.
சார் லைஃப் முடிஞ்சது.! பதைபதைக்க வைத்த ஆடியோ.! போலீசாரிடம் கெஞ்சிய பத்திரிக்கையாளர்.?
இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம் ” சிலை கரைப்பால் நீர்நிலை மாசுபடுவது மட்டுமின்றி கரைக்கப்படாத பாகங்கள் எடுக்கும் பொறுப்பு அரசுக்கு ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத நீர் நிலைகளில் சிலை கரைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர். மேலும், விநாயகர் சதுர்த்தியின் போது சிலைகள் கரைப்பதற்கு அனுமதி வழங்க கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என தமிழக சுற்றுச்சூழல் துறை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அனுமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர்நிலைகள் பராமரிப்புக்கு செலவிடவும், அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் குறித்து விளம்பரப்படுத்தவும் தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பும்ரா வெளியே., வருண் உள்ளே! ஜெய்ஸ்வாலுக்கு ‘ஷாக்’! சாம்பியன்ஸ் டிராபி ‘புது’ அப்டேட் இதோ…
February 12, 2025![Jasprit Bumrah - Varun chakaravarthy - Yashasvi jaiswal](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Jasprit-Bumrah-Varun-chakaravarthy-Yashasvi-jaiswal.webp)
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)