குடியரசு தின விழா: இந்தியா வந்தடைந்த பிரான்ஸ் அதிபருக்கு உற்சாக வரவேற்பு.!

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைந்தார். நாளை நடைபெறும் 75வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்காக அவர் இந்தியா வந்துள்ளார்.

இன்று மதியம் ஜெய்ப்பூர் வந்தடைந்த அவருக்கு மத்திய அமச்சர்கள் பூ கொத்து கொடுத்து உற்சகமாக வரவேற்றனர். இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியுடன் பாரம்பரிய ஜெய்ப்பூரில் உள்ள ஓரிரு பாரம்பரிய இடங்களுக்கு சென்று பார்வையிடுகிறார்.

தற்பொழுது, ஜெய்ப்பூரில் உள்ள ஆம்பர் கோட்டைக்கு சென்றுள்ளார். அங்கு வருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இரவு 7 மணிக்கு தாஜ் ராம்பாக் அரண்மனையில் பிரதமர் மோடியுடன் சந்திக்க உள்ளார். பின்னர், இரவு 9 மணி அளவில் அங்கிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்படுகிறார். நாளை காலை டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பங்கேற்கவுள்ளார்.

மீண்டும் பாஜகவில் இணைந்த கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்..!

மேலும், பிரான்ஸ் அதிபர் வருகையின் போது, 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல்களை இந்தியா வாங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.