2 வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு ..!

Supreme Court

திண்டுக்கல் மருத்துவரை மிரட்டி 20 லட்சம் பறித்த வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த டிசம்பர் மாதம் 1-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால்  கைது செய்யப்பட்டார். அங்கித் திவாரிக்கு எதிரான லஞ்ச வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக தேர்தல் அறிக்கை சூப்பர் ஹீரோவாக அமையும்- ஜெயக்குமார் பேட்டி ..!

மேலும், அங்கித் திவாரி விவகாரத்தில் கைப்பற்றிய ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும்  நீதிபதி தெரிவித்தார். அப்போது, மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் “தமிழ்நாட்டை மட்டும் அமலாக்கத்துறை குறி வைப்பதாக  குற்றம் சாட்டியுள்ளார். மேலும்,  அசாம் முதல்வர் மீது எப்.ஐ.ஆர் உள்ள நிலையில் அந்த வழக்கை அமலாக்கத்துறை விசாரித்ததா..?  உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை அமலாக்கத்துறை எந்த விசாரணையும் நடத்தாதது” என்று கேள்வி எழுப்பினார்.

இதைத்தொடர்ந்து, உண்மையான வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என நீதிபதி விஸ்வநாதன் தெரிவித்தார். அதே வேளையில் அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் நடக்கும் சில வழக்குகளில் நிரபராதிகள் தண்டிக்கப்பட கூடாது என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்