அதிர்ச்சி! மூடநம்பிக்கையால் பறிபோன சிறுவனின் உயிர்!

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் கங்கை நதியில் மிகவும் சோகமான சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. தங்கள் மகனுக்குப் ரத்த புற்று நோய் வந்ததைக் குணப்படுத்த கங்கை நதியில் ஐந்து நிமிடம் மூழ்கினால் ரத்த புற்றுநோய் தீரும் என்ற மூடநம்பிக்கையால் அந்த 7 வயது சிறுவனை கங்கை நதியில் மூழ்க வைத்துள்ளனர். இதனால் சிறுவனின் உயிர் பரிதாபமாக பறிபோனது.
உயிரிழந்த அந்த சிறுவனின் பெற்றோர் கங்கை நதியின் கரையில் மந்திரங்களை உச்சரித்துக் கொண்டிருந்தனர், அவரது அத்தை, சிறுவனை அழைத்து சென்று கங்கையில் பலமுறை அவரை மூழ்கடித்து மூச்சுத் திணறி இறக்கும் வரை மூழ்கடித்து இருக்கிறார்.
முதலில் தேசம்.. நாட்டிற்காக எதனையும் செய்ய வேண்டும்.! மாணவர்களிடையே பிரதமர் மோடி பேச்சு.!
இதனை பார்த்து அதிர்ச்சியான அருகில் இருந்தவர்கள் இப்படியெல்லாம் செய்யாதீர்கள் என்று கூறி அந்த பெண்ணை தடுக்க முயன்றனர். ஆனால் அவர் அவர்களின் பேச்சை கேட்கவில்லை கேட்காமல் மீண்டும் மீண்டும் தண்ணீரில் மூழ்கடித்து சிறுவனை எடுத்துள்ளார்.
தொடர்ச்சியாக மூழ்கடித்து , மூழ்கடித்து சிறுவனை எடுத்ததால் சிறுவன் மூச்சி திணறி பரிதமாக உயிரிழந்தார். இதனையடுத்து, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிஸில் புகார் அளித்ததாக ஹர் கி பவுரி காவல் நிலையத்தின் எஸ்ஹோ பாவ்னா கைந்தோலா தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் தற்போது சிறுவனின் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். அதே சமயம் சிறுவனின் மரணத்திற்கு காரணமான அவருடைய அத்தையை போலீசார் கைது செய்தனர். சிறுவன் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு டெல்லியில் பெற்றோருடன் வசித்து வந்தவர் என்றும் போலீசார் தகவலை தெரிவித்துள்ளனர். பெற்றோர்களின் மூடநம்பிக்கையால் சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.