இன்னும் 25 வழக்குகள் கூட போடுங்கள்… நான் பயப்பட மாட்டேன்.! – ராகுல்காந்தி.

Bharat jodo Nyay Yatra - Rahul gandhi speech

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி முன்னதாக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரை சென்றதை அடுத்து தற்போது கிழக்கில் இருந்து மேற்காக தனது அடுத்தகட்ட நடை பயணத்தை தொடங்கியுள்ளார். மணிப்பூரில் கடந்த மாதம் 14ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரை தற்போது அசாம் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று அசாம் தலைநகர் கவுகாத்தி நகருக்குள் செல்ல முயன்ற ராகுல் காந்திக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, காங்கிரஸ் தொண்டர்கள் சிங்கங்கள். நாங்கள் தடுப்புகளை தகர்ப்போம். சட்டத்தை மதிப்போம் என்றவாறு பேசியிருந்தார். ராகுல்காந்தி பேச்சை அடுத்து, இன்று காலை காங்கிரஸ் தொண்டர்கள் போலீசார் தடுப்புகளை மீறினர். இதனால் போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து , ‘தொண்டர்களிடையே வன்முறையை தூண்டும் விதமாக பேசுகிறார் ‘ என ராகுல்காந்தி மீதும், போலீசார் மீது தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட தொண்டர்கள் மீது ‘பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும்’ அசாம் தலைநகர் கவுகாத்தி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

பாரத நியாய ஒற்றுமை யாத்திரையின் 7வது நாளான இன்று அசாம் மாநிலம், பார்பேட்டா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அசாம் மாநில காங்கிரஸ் தலைவர், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை கடுமையாக விமர்சித்தார், மேலும் நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாதான் என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து பேசிய காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி, காவல்துறை வழக்கு பதிவுசெய்து என்னை பயமுறுத்தலாம் என்ற எண்ணம் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. உங்களால் முடிந்த அளவு என் மீது வழக்குகளை பதிவு செய்யுங்கள். இன்னும் கூடுதலாக  25 வழக்குகள் போடுங்கள், என்னை உங்களால் பயமுறுத்த முடியாது. பாஜக -ஆர்எஸ்எஸ்-ஆல் என்னை மிரட்ட முடியாது என்று பேசினார் .

இந்தியா கூட்டணி தான்.! ஆனாலும் தனித்து போட்டி.! காங்கிரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த மம்தா.! 

மேலும், BJP-RSS அசாமின் மொழி, கலாச்சாரம் மற்றும் வரலாற்றை அழிக்க விரும்புகிறது. அவர்கள் நாக்பூரில் இருந்து அஸ்ஸாமை இயக்க விரும்புகிறார்கள், ஆனால் நாங்கள் அதை அனுமதிக்க மாட்டோம். அஸ்ஸாமில் இருந்து மட்டுமே அஸ்ஸாம் இயக்க முடியும். வெற்றிலை (பான்) விற்கும் சுப்பாரியிடம் கூட வியாபாரத்தில் உள்ள கமிஷன் மாலையில் அது முதலமைச்சரிடம்தான் வந்துசேர்ந்தவிடும். அவர் உங்கள் பாக்கெட்டில் இருந்து உங்கள் பணத்தை எடுக்கிறார். இதுதான் அவருடைய வேலை. நாட்டிலேயே ஊழல் மிகுந்த முதல்வரும் அவர்தான்.

உங்கள் முதல்வர் பயத்தையும் வெறுப்பையும் 24 மணி நேரமும் பரப்பி வருகிறார். ஆனால் அவர் அதோடு நிற்கவில்லை. அசாமில் பயமும் வெறுப்பையும் காட்டி, உங்கள் நிலத்தை முதல்வர் திருடுகிறார். உங்களை வேறு இடத்தில் கவனிக்க வைத்து திசை திருப்பி அவர் உங்கள் பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுக்கிறார்.

ஊடகங்கள் உங்களுக்கு எதை சொன்னாலும், அது அஸ்ஸாம் முதல்வருக்கு தெரிந்துவிடுகிறார். அஸ்ஸாம் மாநில முதல்வரின் கட்டுப்பாடு அமித்ஷாவின் கையில் உள்ளது. அமித் ஷாவுக்கு எதிராக ஹிமந்தா பிஸ்வா சர்மா ஏதாவது சொல்ல துணிந்தால், இரண்டு நிமிடங்களில் கட்சியில் இருந்து சர்மா வெளியேற்றப்பட்டுவிடுவார் என ஆளும் மாநில பாஜக அரசை ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்