இந்தியா கூட்டணிக்கு தொடர் பின்னடைவு… பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டி!

bhagwant mann

நாடாளுமனற மக்களவை தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போயிட்டிடும் என்று அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட சுமார் 28 கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர்.

பீகார், பெங்களூரு, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டங்களில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம், தொகுதி பங்கீடு, ஒருங்கிணைப்பாளர் நியமனம் உட்பட  பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இருப்பினும், இந்தியா கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் அவ்வப்போது தகவல்கள் வெளியாகின.

கடைசியாக டெல்லியில் காணொளி வாயிலாக நடந்த ஆலோசனை கூட்டத்தில், இந்தியா கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக மல்லிகார்ஜுன கார்கேவை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்தியா கூட்டணி தான்.! ஆனாலும் தனித்து போட்டி.! காங்கிரசுக்கு ‘ஷாக்’ கொடுத்த மம்தா.!

ஆகையால், தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்து, இந்தியா கூட்டணிக்கு ஷாக் கொடுத்தார் முதல்வர் மம்தா பானர்ஜி. இதுதொடர்பாக மம்தா கூறியதாவது, இதுவரை காங்கிரஸ் உடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை. இந்தியா கூட்டணியில் தாங்கள் இருக்கிறோம்.

ஆனால், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவோம். நாங்கள் மதச்சார்பற்ற கட்சி. நாங்கள் தனியாக பாஜகவை தோற்கடிக்க முடியும் என தெரிவித்தார். இந்த நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள 13 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப் போட்டியிடும் என அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இது மேலும், இந்தியா கூட்டணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியில் நீடிக்கிறது எனவும் கூறியுள்ளார். பஞ்சாப்பில் ஆம் ஆத்மி – காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே அடுத்தடுத்து தங்களது மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தனித்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தலுக்கான இந்தியா கூட்டணியின் அடுத்தகட்ட முடிவு எப்படி இருக்கும் என அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்க்கபடுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth