அமலாக்கத்துறை முன் ஆஜராக ஷேக் ஷாஜகானுக்கு நோட்டீஸ்..!

Sheikh Shahjahan

ரேஷன் ஊழல் வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் ஷாஜகான் ஷேக் இல்லத்தில் சோதனை நடந்த அமலாக்கத்துறை முடிவு செய்தது. அதன்படி கடந்த 5-ம் தேதி சோதனை நடந்த ஷாஜஹான் ஷேக் இல்லத்தை  நெருங்கியபோது அமலாக்கத்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைக் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

அசாம் ரைபிள் வீரர் துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் காயம்..!

இந்நிலையில், இன்று வடக்கு 24 பர்கானாஸில் உள்ள சந்தேஷ்காலியில் உள்ள திரிணாமுல் தலைவர் ஷாஜஹான் ஷேக்கின் வீட்டில் மத்தியப் படையுடன் அமலாக்கத்துறை  மீண்டும் சோதனை நடத்தியது. 120-க்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப் போலீஸ் படைகளுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சந்தேஷ்காலி பகுதியில் உள்ள ஷேக்கின் வீட்டில் சோதனை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து,  திரிணாமுல் காங்கிரஸ் ஷேக் ஷாஜகான் ஜனவரி 29-ஆம் தேதி அமலாக்கத்துறை முன் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்