கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாது – ஆம்னி நிர்வாகம்!

omnibus

நாளை முதல் ஆம்னி பேருந்துகளை சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க முடியாது என்று ஆம்னி பேருந்துகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதால், இன்றிரவு 7 மணிக்கு மேல் சென்னை நகருக்குள்ஆம்னி பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும்.

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்குவது இன்றே கடைசி நாள் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்திருந்தார். இதனால், மக்கள் குழப்பம் அடைந்துள்ளனர். இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்  தலைவர் அன்பழகன், அரசு தரப்பில் 22-ம் தேதி சுற்று அறிக்கை வெளியிடப்பட்டு இருந்தது.

அதன்படி, இன்று கோயம்பேட்டில் ஆம்னி பேருந்துகளை இயக்குவதற்கு பதிலாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என தெரிவித்திருந்தது. இரண்டு நாள்களில் எப்படி பேருந்து நிலையத்தை அவ்வாறு மாற்ற முடியும், அது முடியாது என்றும் காரணம்

ஆம்னி பேருந்துகளில் பயணிப்பதற்காக பயணிகள் 30 நாள்களுக்கு முன்பாகவே முன்பதிவு செய்கின்றார்கள். இப்படி இருக்கையில், உடனடியாக பேருந்து இயக்கும் இடத்தை மாற்ற முடியாது. இதனால் பயணிகள் தவிக்க நேரிடும். அது மட்டும் இல்லாமல், தைப்பூசம் மற்றும் குடியரசு தின விழா என தொடர் விடுமுறையை முன்னிட்டு,  2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துளை இயக்க முடியாது என்றார்.

இதனால், பயணிகளின் நலன் கருதி ஆம்னி பேருந்துகளை சென்னை நகருக்குள் இருந்தே இயக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்