இன்று அரியாலூரில் திறக்க காத்திருக்கும் அனிதா நினைவு நூலகம்…!(செப்.1) மாணவிஅனிதா மறைந்த தினம் இன்று..!!

Default Image

அரியலூர் மாவட்டத்தில் அனிதா நினைவாக புது நூலகம் இன்று திறக்கப்படவுள்ளது.

நீட் தேர்வின் காரணமாக தனது மருத்துவ கனவையும்,வாழ்க்கையையும் இழந்த மாணவி அனிதா நினைவாக அவரின் அரியாலுர் மாவட்டத்தில் நினைவு புதுநூலகம் தயாராகி வந்த நிலையில் அந்த நூலகம் இன்று திறக்கப்பட உள்ளது.

அறியாதவர்கள் இல்லை அரியலூர் மாணவி அனிதாவை….!

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே குழுமூரை சேர்ந்தவர் அனிதா. இவர் கடந்த ஆண்டு நடந்து முடிந்த பிளஸ் டூ பொது தேர்வில் 1,176 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றவர்.கஷ்டத்திலும் கல்வி படிப்பை திறம் பட படித்தார் மாணவி அனிதா.

Related image

அந்த ஆண்டு மருத்துவ படிப்புக்கு கண்டிப்பாக நீட் நுழைவு தேர்வு எழுத வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதனால் அனிதாவும் நீட் நுழைவு தேர்வு எழுதினார். அதில், 700 மதிப்பெண்களுக்கு 86 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றிருந்தார்.
Related image
எனவே, நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடந்தால், தனக்குக் கிடைக்க வேண்டிய மருத்துவ இடம் கிடைக்காமல் போகும் என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் அனிதா வழக்கு தொடர்ந்திருந்தார்.
ஆனால், நீட் தேர்வின்அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் அனிதா மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்தார். தனது கனவு சிந்ததை கண்ட அனிதா அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related image
 செப்.1 அனிதா மறைந்த தினம் இன்று.அனிதா மறைந்து 1 வருடம்  ஆகிய நிலையிலும் நீட் தேர்வு தமிழகத்தை விட்டு மறையவில்லை.”சிறகடிக்க துடித்த அந்த இளம் பட்டாம் பூச்சிக்கு “உங்களுடன் சேர்ந்து தினச்சுவடின் சார்பிலும் அஞ்சலி..! செலுத்துகிறோம்.
Image result for அனிதா நீட்
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்