கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்களுக்கு ஏமாற்றம் தான்.. அமைச்சர் சேகர்பாபு

sekar babu

மத்திய அரசு மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்த பார்க்கிறது என்று இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு குற்றசாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் கூறியதாவது, அயோத்தியில் ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவை வைத்து இன, மத பிரச்னைகளை ஏற்படுத்தி தமிழ்நாட்டின் அமைதிய சீர்குலைத்து கலவரத்தை உண்டாக்க நினைத்தவர்கள் ஏமாற்றம் அடைந்தார்கள்.

மத, இன ரீதியான குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது மத்திய அரசு சுமத்த பார்க்கிறது. உரிய அனுமதி எதுவும் பெறாமல் கோயில்களில் குண்டர்கள் போல எல்இடி திரைகள் அமைத்து பதற்ற நிலையை ஏற்படுத்தினர் என தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு அன்று பிராண பிரதிஷ்டை நிகழ்வை நேரலையில் ஒளிபரப்ப தமிழக அரசு மறுப்பு தெரிவித்ததாக பாஜகவினர் குற்றச்சாட்டிய நிலையில், அமைச்சர் சேகர் பாபு பதிலளித்துள்ளார்.

ஆளுநர் தேநீர் விருந்து- காங்கிரஸ் புறக்கணிப்பு..!

மேலும், இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும். இதனால் இன்றிலிருந்து ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து செயல்படாது. தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்து உரிமையளர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் செயல்பட முடியாது. மக்களுடைய தேவை, மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தான் அரசு செயல்பட முடியும்.

தமிழ் அரசுக்கு ஒத்துழைத்தால் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் நல்லுறவு நீடிக்கும். கிளாம்பாக்கம் பேருந்து முனையம் மக்களின் வசதிக்காக திட்டமிட்டு கட்டப்பட்டது, ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்றார் போல் கிளாம்பக்கத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நிபந்தனைக்கு உட்பட்டு அளித்த வாக்குறுதிக்கு ஏற்றது போல் செயல்பட வேண்டும் என்றுள்ளார்.

ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க நிர்வாகிகள், ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிறுத்த போதுமான இடவசதி இல்லை. இதற்கான இடம் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. எனவே, பணிகள் அனைத்தும் முடிந்து ஆம்னி பேருந்துகளுக்கு ஏற்ற வசதி ஏற்படுத்தி தந்தால் பேருந்துகளை கிளாம்பாக்கத்துக்கு மாற்றுவோம் என கூறியிருந்த நிலையில் அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்