ராமர் கோயில் திறப்பு அரசியல் நிகழ்வு அல்ல – நடிகர் ரஜினிகாந்த் பேச்சு!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று ஜனவரி 22 கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள் என பலரும் இந்த விழாவில் கலந்துகொண்டார்கள்.
தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். இந்த நிலையில் அயோத்தி கோயிலில் இருந்து திரும்பி சென்ற ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் ” இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் கோவில் திறப்பு விழாவில் நான் கலந்து கொண்டது எனது வாழ்நாள் பாக்கியமாக நான் நினைக்கிறேன்.
ராமர் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கிபக்தர்கள் பலர் காயம்!
இனிமேல் ஒவ்வொரு ஆண்டும் ராமர் கோவிலுக்கு கட்டாயம் வருவேன். என்னை பொறுத்தவரை ராமர் கோயில் திறப்பு என்பது அரசியல் நிகழ்வு அல்ல, ஆன்மீக நிகழ்வு. ராமர் கோயில் திறந்தவுடன் நேரில் பார்த்த முதல் 150 பேரில் நானும் ஒருவன், இதனை நினைத்து பார்க்கையில் உண்மையில் எனக்கு பெரிய சந்தோஷமாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும், எல்லாருடைய பார்வையும் ஒரே மாதிரி இருக்க வேண்டிய அவசியமில்லை” எனவும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சென்று சென்னை திரும்பிய நிலையில், மீண்டும் படப்பிடிப்பில் இணையவுள்ளார்.