செம்மண் குவாரி வழக்கு – முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தள்ளுபடி!

jayakumar

திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சியாக தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கடந்த 2006-2011ம் ஆண்டு திமுக, ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி இழப்பு ஏற்பட்டது. எனவே, அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியாக அப்போது கனிம வள அமைச்சராக இருந்த பொன்முடி உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

ஜெயலலிதா நகை விவகாரம் – சிபிஐ நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்த சூழலில் அரசு தரப்பு சாட்சியங்கள் பிறழ் சாட்சியம் அளித்து வருவதால், அரசு வழக்கறிஞர்களுக்கு உதவியாக செயல்பட தன்னையும் வழக்கில் இணைக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 8ம் தேதி முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முன்பு நடைபெற்ற விசாரணையில், அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்க கோரி ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

இதுபோன்று, ஜெயக்குமார் மனுவை தள்ளுபடி செய்யும்படி அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர். அதனைத் தொடர்ந்து, நீதிபதி பூர்ணிமா, வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார். இந்த நிலையில், செம்மண் குவாரி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில், சாட்சியாக தன்னையும் இணைக்குமாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்தது விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்