#INDvsENG : விராட் கோலி இடத்துக்கு அவர் சரியா இருப்பாரு! ஆகாஷ் சோப்ரா கருத்து!
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஹைதராபாத்தில் வரும் வியாழன் 25-ஆம் தேதி தொடங்குகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக விராட் கோலி முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு மாற்று வீரரை தேர்வுக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விராட் கோலி இல்லாத அந்த இரண்டு போட்டிகளில் அவருடைய இடத்தில் விளையாட ரிங்கு சிங் சரியாக இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விராட் விளையாடாதது அணிக்கு பின்னடைவு தான்.
#INDvENG : முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விலகல்!
ஆனால், அவர் இல்லாத அந்த இடத்தில் சரியான மாற்று வீரர் யார் என்று என்னிடம் கேட்டீர்கள் என்றால் நான் ரிங்கு சிங் என்று கூறுவேன். அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் பெரிதாக விளையாடியது இல்லை அது உண்மை தான்.
இருப்பினும், அவர் டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அருமையாக விளையாடி தனது திறமையை நிரூபித்து வருகிறார். அதற்கான ஒரு உதாரணத்தை நான் சொல்லவேண்டும் என்றால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து முடிந்த டி20 தொடரை நான் கூறுவேன். எனவே, என்னை பொறுத்தவரை டெஸ்ட் தொடரிலும் ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.
அவரை மற்ற போட்டிகளில் விளையாடி தனது திறமையை வெளிய காட்டியது போல டெஸ்ட் போட்டிகளிலும் நிச்சயம் காட்டுவார். விராட் கோலி இல்லாத அந்த இடத்தை நிரப்ப அவர் சரியான ஆளாக இருப்பார்” எனவும் ஆகாஷ் சோப்ரா தனது கருத்தை தெரிவித்துள்ளார்.