அய்யா வைகுண்டர் தலைமை பதியில் எடப்பாடி பழனிசாமி தரிசனம்

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்தார். அங்கு அவர் பக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் அய்யா வைகுண்டர் தலைமை பதி உள்ளது.

இந்த கோவிலுக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார்.

கோவிலுக்கு உள்ளே, எடப்பாடி பழனிச்சாமி தனது மேல் சட்டையை கழற்றிவிட்டு தலைப்பாகை அணிந்து கொண்டு தரிசனம் செய்தார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது, “இறைவனின் மறு அவதாரமாக இருக்கும் அய்யா வைகுண்டரின் ஆசியால் தமிழகத்தில் நல்ல எதிர்காலம் உருவாகும். இங்குள்ள மக்கள் அனைவரும் நேசிக்கின்ற அய்யா வைகுண்டரின் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது பெரும் மகிழ்ச்சி.

திமுக எம்எல்ஏ மகன் வீட்டு பணிப்பெண் சித்ரவதை செய்யப்பட்ட விவகாரம்! FIR-ல் வெளியான தகவல்கள்

இந்த வாய்ப்பை உருவாக்கி கொடுத்த கோவில் குழு உறுப்பினர்களுக்கு நன்றி” என்றார். இன்றைய தினம் அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்