ஐசிசி 2023 கனவு அணி அறிவிப்பு.. கேப்டனாக சூர்யகுமார்..!

Suryakumar Yadav

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடிய 11 வீரர்களை தேர்வு செய்து 2023 ஆம் ஆண்டின் சிறந்த கனவு அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)  அறிவித்துள்ளது. அந்த கனவு அணிக்கு கேப்டனாக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரைத் தவிர மேலும் மூன்று இந்திய வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றுள்ளனர்.

விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா போன்ற பெரிய வீரர்கள் இந்த அணியில் இடம் பெறவில்லை, ஆனால் ஐசிசி மற்ற இந்திய நட்சத்திரங்களான ரவி பிஷ்னோய், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அர்ஷ்தீப் சிங் போன்றவர்களை 11 பேர் கொண்ட அணியில் சேர்த்துள்ளது.

முதல் துவக்க வீரராக ஜெய்ஸ்வால் இடம்பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக இந்தியாவுக்காக ஜெய்ஸ்வால் அறிமுகமானார். இவர் கடந்த ஆண்டு 14 போட்டிகளில் 430 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் இங்கிலாந்தின் பிலிப் சால்ட் 2-வது துவக்க வீரராக உள்ளார். கடந்த ஆண்டு பிலிப் சால்ட் டி20 தொடரில் ஐந்து போட்டிகளில்  331 ரன்கள் எடுத்தார்.

#INDvENG : முதல் இரண்டு போட்டிகளில் விராட் கோலி விலகல்!

3-வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் நிக்கோலஸ் பூரன்  உள்ளார். 4-வது இடத்தில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக உள்ளார். நியூசிலாந்தின் மார்க் சாப்மேன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர். ஜிம்பாப்வேயின் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா ஆறாவது இடத்தைப் பிடித்தார்.  7-வது இடத்தில் உகாண்டா அணியின் அல்பேஸ் ரம்ஜானி தேர்வாகி அந்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

அயர்லாந்தின் மார்க் அடேய்ர் 8-வது இடத்தில் உள்ளார். ஜிம்பாப்வேயின் ஆல்ரவுண்டர் சிக்கந்தர் ராசா மற்றும் அயர்லாந்தின் மார்க் அடேய்ர் ஆகியோரின் இரு பெயர்கள் அணியில் இடம்பெறுவார்கள் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. சிக்கந்தர் ராசா 30 போட்டிகளில் 55 விக்கெட்டுகளையும், அயர்லாந்தின் பந்துவீச்சு ஆல்-ரவுண்டர் மார்க் அடேய்ர் 26 விக்கெட்டுகளை எடுத்தார். ஒவ்வொரு 13 பந்துகளுக்கும் ஒரு விக்கெட்டை எடுத்தார்.

பந்துவீச்சில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் 9-வது இடத்தை பிடித்தார். அதே போல வேகப்பந்து ரிச்சர்ட் ங்கரவா10-வது இடத்தை பிடித்தார். இவர் ஜிம்பாப்வே அணிக்காக 13 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 11-வது இடத்தை பிடித்தார். அர்ஷ்தீப் கடந்த ஆண்டு இந்தியாவுக்காக 21 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ICC ஆடவர் T20 ஆண்டின் சிறந்த அணி:

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், பில் சால்ட், நிக்கோலஸ் பூரன், மார்க் சாப்மேன், சிக்கந்தர் ராசா, அல்பேஷ் ரம்ஜானி, மார்க் அடேர், ரவி பிஷ்னோய், ரிச்சர்ட் நாகர்வா, அர்ஷ்தீப் சிங்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson