ராமர் கோயில் LED திரை.., வயிற்றில் அடிக்கும் திமுக.! நிர்மலா சீதாராமன் கடும் கண்டனம்.!

Ram Temple Mandir - Union Minister Nirmala Sitharaman

உ.பி அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழா (Pran Pratishtha) இன்று பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நண்பகல் 12.30 மணி முதல் 1 மணிக்குள் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அதன் பின்னர் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க இந்தியாவில் உள்ள பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள அயோத்தி சென்றுள்ளனர்.

அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்குவிழாவினை நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் எல்இடி திரைகள் மூலம் மக்கள் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு அருகே எல்இடி திரைகள் அமைத்து நேரடியாக பொதுமக்கள் காண பாஜகவினர் திட்டமிட்டு இருந்தன.ர் இதற்காக ஒரு வார காலமாக தனியாருக்கு சொந்தமான இடத்தில் பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை காண இருந்தனர்.

ராமர் கோவில் விழா : கலந்து கொள்ளும் தமிழக பிரபலங்கள் யார்?

இந்நிலையில் காவல்துறை, பொதுப்பணித்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் இதற்கு அனுமதி வழங்க மறுத்ததால் பந்தல்கள் மற்றும் எல்இடி விளக்குகள் ஆகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இந்த விழாவில் தான் மக்களோடு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவினை காண இருந்தார். தற்போது காவல்துறை மறுப்பு தெரிவித்ததன் காரணமாக தனது கண்டனத்தை எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், காவல் காஞ்சிபுரத்தில் மட்டும் 466 இடங்களில் அயோத்தி கும்பாபிஷேகத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், 400க்கும் மேற்பட்ட இடங்களில் அமைக்கப்பட்ட எல்இடி திரை அமைக்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இதனால் எல்இடி சப்ளையர்ஸ் அச்சத்தில் உள்ளனர். இந்து விரோத திமுக சிறு வணிகர்கள் வயிற்றில் அடிக்கிறார்கள் என கடுமையாக விமர்சித்து உள்ளார்.

அதேபோல் , நாகர்கோவில் தோவாளை முருகன் கோவிலில் அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவை நேரடி ஒளிபரப்பு செய்ய எல்இடி திரைகள் வைக்க அனுமதி மறுக்கப்படுகிறது என்று விமர்சித்து காவல்துறையின் உத்தரவையும் கீழே நிர்மலா சீதாராமன் பதிவிட்டுள்ளார்.

மேலும், ஸ்ரீபெரும்புதூர் செல்வ விநாயகர் கோவில், தனியாரால் நடத்தப்படும் மொளச்சூர் கருமாரியம்மன் கோவில், தனியாரால் நடத்தப்படும் செல்விழிமங்கலம் ஜாம்போதை பெருமாள் கோவில் போன்ற கோவில்களில் தமிழக காவல்துறையினரால் அன்னதானம் தடுக்கப்படுகிறது. இந்துக்க்களுக்கு எதிராக, ஆளும் திமுக அரசு, காவல்துறையை பயன்படுத்தி அடக்குமுறையை தொடர்கிறது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்து உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்