பொய் செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – தமிழ்நாடு அரசு
நாளை அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் பல அரசியல் கட்சித்தலைவர்கள், திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. நாளை அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடத்துவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளதாக பொய்யான தகவல் பரவியது.
நாளை சிறப்பு பூஜைகள் நடத்த தமிழக அரசு எந்த தடையும் விதிக்கவில்லை என்றும், பொய் செய்தி பரப்பியவர்கள் மீது அரசு தெரிவித்த்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ” உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு குடமுழுக்கு விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. அதனையொட்டி, தமிழ்நாட்டு கோயில்களில் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை வாய்மொழியாக தடைவிதித்துள்ளது என தனியார் நாளிதழில் தவறான செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் வாய்ப்பு வந்தால் தட்ட வேண்டாம் – மாநாட்டில் அன்பில் மகேஷ் பேச்சு.!
ஆலயப் பணிகளை அனைவரும் போற்றும் வகையில் நிறைவேற்றி வரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்திடும் தீயநோக்கத்துடன் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு, பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி, அரசு மீது வெறுப்பைத் தூண்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நாளிதழின் இச்செயல் மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
திருக்கோயில் பணிகளை மிகச்சிறப்பாக நிறைவேற்றி, நாள்தோறும் மக்களின் பாராட்டுகளைப் பெற்றுவரும் தமிழ்நாடு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அப்பட்டமான வேண்டுமென்றெ உள்நோக்கத்துடன் பொய்ச்செய்தியை வெளியிட்டுள்ள செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இத்தகைய தவறான, உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட நாளிதழ் மீது தமிழ்நாடு அரசு சார்பில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.