ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் வழி தவறியதால் பதற்றம்!

Helicopter - Chandrababu

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு சென்ற ஹெலிகாப்டர் , விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு வழியாக செலவதற்கு பதிலாக தவறான பாதையில் சென்றது. இதனையடுத்து, ஏர் டிராபிக் கன்ட்ரோல் (ATC) பைலட்டை எச்சரித்த பின்னர் பாதை மாற்றப்பட்டது.

விசாகப்பட்டினத்தில் இருந்து அரக்கு பகுதிக்கு செல்லும்போது விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடன் ஒருங்கிணைப்பில் இடையூறு ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் வழி தவறியதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பாதையை திருப்பிய பின் பாதுகாப்பாக அரக்கு அரக்கு பகுதியில் தரையிறங்கியது.

மியான்மர் எல்லையில் விரைவில் தடுப்பு வேலி அமைக்கப்படும்… அமித் ஷா அறிவிப்பு!

நாயுடு ரா கடலிரா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அரக்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்தது. பொப்பிலிக்குப் பிறகு ‘ரா கடலிரா’ நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நார்த் ஆந்திராவில் நடைபெறும் இரண்டாவது பொதுக்கூட்டம் இதுவாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்