சானியா மிர்சாவை பிரிந்த சோயிப் மாலிக் பாகிஸ்தான் நடிகையுடன் இரண்டாம் திருமணம்.!

shoaib malik marry

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக், பாகிஸ்தான் நடிகை சனா ஜாவேத்தை திருமணம் செய்து கொண்டார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கும், ஷோயிப் மாலிக்குக்கும் 2010ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இஷான் மிஸ்ரா என்ற 5 வயது மகனும் உள்ளார்.

இந்நிலையில் சானியாவை விவாகரத்து செய்துவிட்டு நடிகையை திருமணம் செய்து கொண்டார் மாலிக். தற்போது இவர்கள் திருமண புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திருமண புகைப்படங்களுடன் பகிர்ந்து கொண்டு “அல்ஹம்துலில்லாஹ். நாங்கள் உங்களை ஜோடிகளாகப் படைத்தோம்” என்று மாலிக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், ஷோயிப் மாலிக்கு இது மூன்றாம் திருமணம் என்று சொல்லப்படுகிறது. ஆம், சானியாவுக்கு முன், மாலிக் ஆயிஷா சித்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்