ராமர் கோவில் கும்பாபிஷேக தினத்தன்று ரிலையன்ஸ் அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பு..!

Reliance

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது.இதனால் அவருக்கு கோயிலை கட்ட கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1,100 கோடியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் நாளை மறுநாள் பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில்  பிரதிஷ்டைவிழாவை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் உள்ள ரிலையன்ஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு ஜனவரி 22-ம் தேதி விடுமுறை என அறிவித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நேற்று தனது மூன்றாம் காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் மூன்றாவது காலாண்டு (அக்டோபர்-டிசம்பர்) முடிவுகளில் நிறுவனம் சிறப்பான லாபத்தையும் வருவாயையும் பதிவு செய்துள்ளது.

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா.! பங்குச்சந்தைக்கும் விடுமுறை.!

அயோத்தியில் நடைபெறும் கோவில் கும்பாபிஷேகம் மக்கள் காணும் வகையில் நாளை மறுநாள் மத்திய அரசு அலுவலர்களுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசம் சண்டிகர் மற்றும் புதுச்சேரியில் நாளை மறுநாள் முழுநாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், திரிபுரா, ஹரியானாவில் அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை அரை நாள் விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tn
axar patel Ruturaj Gaikwad
myanmar earthquake
rishabh pant sanjiv goenka
mk stalin assembly
rishabh pant lsg
delhi parliament assembly