அமெரிக்காவை பந்தாடி அயர்லாந்து அசத்தல் வெற்றி..!

ஐசிசி 19 வயதிற்கு வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை இன்று தொடங்கியது. இதில் முதல் போட்டியான IRE vs USA  இடையேயான போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனால் அமெரிக்க அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது.

தொடக்கம்  முதலே அமெரிக்க அணி ஒரு முனையில் விக்கெட்டுகளையும் இழந்து மறு முனையில் மிகவும் திணறியே ரன்களை சேர்த்தது. இதனால் 40.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக குஷ் பாலாலா 22 ரன்கள் எடுத்திருந்தார். அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக ரூபன் வில்சன், ஆலிவர் ரிலே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதனால் 50 ஓவர்களில் 106 ரன்கள் என்ற எளிதான இலக்குடன்  களமிறங்கியது அயர்லாந்து அணி.

கேலோ இந்தியா 2024.! எத்தனை வீரர்கள்.? எத்தனை பதக்கங்கள்.? முழு விவரம் இதோ…

முதல் ஓவரிலேயே அயர்லாந்து அணியின் தொடக்க வீரரான ஜோர்டான் நீல் 4 ரன்களை மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார். அதன் பின் 2.1  ஓவரில் கவின் ரோல்ஸ்டன் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட் வீழ்ந்த போது அயர்லாந்து அணி 5-2 என்று பரிதாபமான நிலையில் இருந்தது. பின்னர் களமிறங்கிய வீரர்கள் சற்று நிலைத்து நின்று விளையாடினர்.

அயர்லாந்து அணி தரப்பில் ரியான் ஹண்டர் அரை சதம் விளாசினார். இதனால் இறுதியில் அயர்லாந்து அணி 22.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை எட்டி எளிதில் இந்த போட்டியை வென்றது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்