குஜராத்தில் துயரம்! படகு கவிழ்ந்து 16 பேர் பலி!

gujarat Boat Accident

குஜராத் மாநிலத்தில் வதோதரா பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஹர்னி என்ற ஏரிக்கு சுற்றுலா செல்ல பள்ளி மாணவர்கள் சார்பில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 27 மாணவர்கள் மற்றும்  ஆசிரியர்கள் படகில் பயணம் செய்தனர்.

அப்போது திடீரென எதிர்பாராத விதமாக படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. படகு கவிழ்ந்ததில் 2 ஆசிரியர்கள் 14 மாணவர்கள் உட்பட 16 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். படக்குழு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதை மீட்பு படைதுறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மீட்பு பணியில் ஈடுபட்டு படகில் இருந்த 10 மாணவர்கள் பத்திரமாக மீட்கபட்டனர். இருப்பினும் 16 இந்த படகு விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் சாசனத்தை மீறியுள்ளார் பிரதமர் மோடி… காங்கிரஸ் கடும் விமர்சனம்! 

இந்த படகு கவிழ்ந்த போது அதில் இருந்த மாணவர்களுக்கு உயிர் காக்கும் கவச உடை கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இந்த விவகாரத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி கூறியுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில்,இந்த படகு விபத்தில் கவிழ்ந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள் பிரதமர் மோடி, ரூ. 2 லட்சம் நிவாரணமும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்