ஜன.24ல் விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி – தேமுதிக அறிவிப்பு.!
உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். தற்பொழுது, மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த நாள்தோறும் குடும்பத்துடன் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த்தின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி வரும் 24ம் தேதி கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளதாக தேமுதிக அறிவித்துள்ளது. இந்நிகழ்வில் தேமுதிக நிர்வாகிகள் கலந்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.