ஓ.பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட உள்ளோம் – டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம், மணிகுண்டு அருகே அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் “ஓ.பன்னீர்செல்வமும், நானும் வருங்கால அரசியலில் இணைந்து செயல்பட வேண்டும் என ஒரு முடிவை எடுத்துள்ளோம். கூட்டணி பற்றி உரிய நேரத்தில் முடிவை அறிவிப்போம். திருவள்ளுவருக்கு காவி ஆடை விவகாரத்தில் ஆளுநர் அவரது பதவிக்கு இழுக்கு ஏற்படுத்தும் விதமாக உள்ளது.
சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் மேலும் ஒருவர் பலி
தமிழ்நாட்டு மக்கள் விரும்பாத திட்டங்களை இங்கே திணிப்பதில்லை என்ற நிலைபாட்டை மத்திய பாஜக அரசு எடுத்துள்ளதாக தெரிகிறது. அதனால் நாங்கள் பாஜகவை கடுமையாக விமர்சிப்பத் குறைத்துள்ளோம்” என தெரிவித்தார்.