விறுவிறுப்பாகும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு..! காளைகள் முதல் டாஸ்மாக் வரை கட்டுப்பாடுகள் தீவிரம்.!

Avaniyapuram Jallikattu

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் நாளை (ஜனவரி 15 பொங்கல் தினத்தில்) அவனியாபுரத்திலும் அடுத்து (ஜனவரி 16 மாட்டு பொங்கல் அன்று) பாலமேட்டிலும் அதற்கு அடுத்ததாக ஜனவரி 17 காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூர் பகுதியிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.

நாளை அவவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விழாவுக்கு மாநகர காவல் ஆணையர் ஜே.லோகநாதன் , துணை ஆணையர்கள் மங்ளேசுவரன், பாலாஜி ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இதற்கான பாதுகாப்புப் பணியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நாளை மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவதால் அம்மாவட்ட காவல்துறை மற்றும் மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

திருச்சியில் 3 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி.! 14 இடங்களில் அனுமதியில்லை

  • ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்படும். அந்த அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே நாளை அவனியாபுர ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்படுவர்.
  • காளைகளுடன் வரும் உரிமையாளர், உதவியாளர் மற்றும் மாடுபிடி வீரர்கள் யாரும் மது போதையில் இருக்கக் கூடாது.
  • காளைகளின் உரிமையாளர்கள் மாட்டின் மூக்கணாங்கயிறை அறுப்பதற்கு கத்தி போன்ற கூரிய ஆயுதங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது .
  • ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் , தங்கள் புகைப்படம் அடங்கிய அனுமதி சீட்டு, மருத்துவ தகுதி சீட்டு ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.
  • வாடிவாசல் அருகே உள்ள வீட்டின் உரிமையாளர்கள், தங்கள் குடும்பத்தினரை தவிர வேறு நபர்களை ஜல்லிக்கட்டு தங்கள் வீடுகளில் அனுமதிக்க கூடாது. ஏதேனும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் அந்த வீட்டின் உரிமையாளர் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும்.

என பல்வேறு கட்டுப்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. முன்னதாக, மதுரை மாநகராட்சி நிர்வாகம், அவனியாபுரம் பகுதியில் உள்ள 10 டாஸ்மார்க் கடைகளுக்கு நாளை விடுமுறை அளித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்