இந்தியா ஆலோசனை கூட்டம்.! யாரெல்லாம் பங்கேற்கவில்லை.?

india alliance

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், இந்தியா கூட்டணியில் இன்னும் தொகுதி பங்கீடு, பிரதமர் வேட்பாளர் யார் என பல்வேறு விஷயங்கள் குறித்து முடிவு செய்யாமல் உள்ளது. இந்த சூழலில், இந்தியா கூட்டணியின் முக்கிய ஆலோசனை கூட்டம் காணொளி வாயிலாக இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் முக்கிய தலைவர்கள், பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளதாகவும் கூறப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தேர்வு, பரப்புரையைத் தொடங்குவது, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் காணொளி மூலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பரபரப்பாகும் இந்தியா கூட்டணி.. இன்று முக்கிய ஆலோசனை!

இந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர். அதன்படி, திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து காணொளி மூலம் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வியூகம், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே, சரத் பவார் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மம்தா பானர்ஜி, சரத் பவார் உள்ளிட்டோருக்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட நிகழ்வுகள் இருப்பதால் அவர்கள் பங்கேற்கவில்லை என கூறப்பட்டிருந்த நிலையில், உத்தவ் தாக்கரேவும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்