திருநீறு வைப்பதால் இவ்வளவு நன்மைகளா?. அட இது தெரியாம போச்சே..!

vibhuthi

திருநீறு சைவத்தின் ஒரு அடையாளமாக மட்டுமல்லாமல் ஒரு அங்கமாக கருதப்படுகிறது .சைவத்தில் அங்கங்கள் என்றால், பஞ்சாட்சன மந்திரம் ருத்ராட்சம், விபூதி. இதில் மிக முக்கியமாக கருதப்படுவது திருநீறு இது பல வகைகளில் நன்மைகளை பெற்று தரும், அது என்னவெல்லாம் என்றும்  குளிக்காமல் திருநீறு வைக்கலாமா என்பது பற்றியும் இந்த பதிவில் பார்ப்போம்.

திருநீருக்கு நிறைய பெயர்கள் உண்டு .அதில் விபூதி என்றால் வி என்பது மேலான என்பதையும் பூ என்றால் ஐஸ்வரியம் என்பதையும் குறிக்கும், மேலான ஐஸ்வர்யத்தை தரக்கூடியது.. திருநீறு என்றால் நம்முடைய வினைகளை எல்லாம் நீராக்கி பஸ்பம் ஆக்குவது என்று பொருள்.

திருநீறு அணிந்தால் ஏற்படும் நன்மைகள்

சகல செல்வ நலன்களையும் தரக்கூடியது இந்த திருநீறு.மகாலட்சுமி வைணவ சமயத்தில் உள்ளவர், அவர் தானே செல்வங்களை கொடுப்பார் என நீங்கள் எண்ணலாம். தெய்வங்களுக்கு சைவம் வைணவம் கிடையாது ,அது நாமே உருவாக்கியதுதான்.

பூலோக காம தேனு  என கூற கூடியது  பசு. இந்தப் பசு மகாலட்சுமியின் சுலோகம் தான், அதனால் தான் வீ புது வீடு புகுதல் போன்ற சுப  காரியங்களில் கோ பூஜை செய்யப்படுகிறது. ஆகவே அந்த பசுவில் இருந்து பெறப்படும் சாணத்திலும் மகாலட்சுமி வாசம் பண்ணுவார் என்பது ஐதீகம். இந்த சாணத்தில் இருந்து தான் திருநீறு தயாரிக்கப்படுகிறது அதனால் அந்த திருநீரிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

  • காலை எழுந்ததும் குளித்த பிறகு திருநீர் அணிந்தால் தலையில் உள்ள தேவையற்ற நீரை உறிஞ்சி எடுக்கும்.
  • தலைவலி ஏற்பட்டால் முந்தைய காலத்தில் திருநீரை நீரில் கரைத்து பூசி விடுவார்கள் இது நெற்றியில் உள்ள தேவையற்ற நீரை  நீக்கி தலைவலியை குறைக்கும்.
  • திருநீறு அணிந்தால் லட்சுமி கடாட்சம் பெருகும். அன்றாடம் திருநீர் அணிபவர்களுக்கு வசியம் செய்ய முடியாது.

குளிக்காமல் திருநீர் அணியலாமா?

திருநீறு என்பது தீட்டுக்களையும் துளக்குகளையும் போக்கக்கூடிய அருமருந்து. ஆக திருநீறு வைப்பதற்கு குளிக்க வேண்டும் என்று அவசியமில்லை. அதற்காக குளிக்காமலே தினமும் வைத்துக் கொள்ளலாம் என்றும்  இல்லை. ஒரு சில நேரங்களில் உடல்நிலை சரி இல்லாமல்  இருக்கும் ,இவ்வாறு குளிக்க முடியாத நேரங்களில் திருநீறு அணிந்தால் நீங்கள் நீராடிய பலனை தரும்.

ஆகவே திருநீறு என்பது ஒரு மருந்து இந்த மருந்தை நாம் எப்போது வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 19122024
rain pradeep john
africa cyclone
anil kumble ashwin
l murugan
chennai rains
Mumbai Boat Accident