ஹிந்தி தெரியாது போயா… அனல் பறக்கும் டீசர்! அதகளம் பண்ணும் கீர்த்தி சுரேஷ்.!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இயக்குனர் சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரகுதாத்தா’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் எம் எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய், தேவதர்ஷினி, ராஜீவ் ரவீந்திரநாதன், ஜெயக்குமார், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலச்சந்திரன், இஸ்மத் பானு, கே.எஸ். மிப்பு, முகேஷ், ஜானகி, ஆதிரா பாண்டிலட்சுமி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் என்பவர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்து வருகிறார். படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
பிரபாஸின் ‘கல்கி 2829 ஏடி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
டீசரில் கீர்த்தி சுரேஷ் பேசும் வசனங்களும் வரும் காட்சிகளும் பார்ப்பதற்கு மக்களை வெகுவாகவே கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக ஹிந்தி தெரியாது போயா என டீசரில் கீர்த்தி சுரேஷ் பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கயல்விழி அட்டகாசமான நகைச்சுவை பயணத்தை காண தயாராகுங்கள். ரகுதாத்தா, விரைவில் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025