INDvsAFG : டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு!
இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி இன்று மொஹாலியில் இருக்கும் பிந்த்ரா மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய வீரர்கள்
ரோஹித் சர்மா(கேப்டன்), சுப்மன் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரின்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்
ஆப்கானிஸ்தான் வீரர்கள்
ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான்(கேப்டன்), ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், குல்பாடின் நைப், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, நவீன்-உல்-ஹக், முஜீப் உர் ரஹ்மான்
இந்திய அணியை பொறுத்தவரையில் ஜிதேஷ் சர்மா அல்லது சஞ்சு சாம்சன் இருவரும் யார் இன்றய போட்டியில் விளையாடப்போகிறார்கள் என்ற எதிர்ப்ப்பு எழுந்திருந்த நிலையில், தற்போது ஜிதேஷ் சர்மா அணியில் இடம்பெற்றுள்ளார்.
அந்த 2 பேர் இருந்தா டி20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு தான் – ஏபி டி வில்லியர்ஸ்!
மேலும், இந்த டி20 தொடர்தான் இந்திய அணி டி20 உலககோப்பைக்கு முன் விளையாட போகும் கடைசி டி20 தொடராகும். ஏனென்றால், இந்த தொடருக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி வரும் ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலககோப்பையில் தான் விளையாட உள்ளனர் எனவே இந்த தொடரை வெற்றிபெறவேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்குகிறார்கள்.
இதற்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியும் ஆப்கானிஸ்தான் 5 டி20 போட்டிகளில் நேருக்கு நேராக மோதியுள்ளது. அதில் 4 போட்டியில் இந்திய அணியே வெற்றிபெற்றுள்ளது. 1 போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. எனவே, இன்று நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெற்று இந்தியாவுக்கு எதிரான டி20-யில் முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற முனைப்பில் ஆப்கானிஸ்தான் உள்ளனர்.