டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு!

tnpsc group 2

டிஎன்பிஎஸ்சி-யால் நடத்தப்படும் குரூப் – 2 முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (டிஎன்பிஎஸ்ச), தொகுதி 2 மற்றும் 2A பணிகளுக்கான முதன்மை எழுத்துத் தேர்வில் கட்டாயத் தமிழ் மொழி தகுதித்தாள் மற்றும் பொது அறிவு ஆகிய இரு தாள்களுக்கும் தேர்வு 25.2.2023 அன்று நடைபெற்றது.

6,151 பணியிடங்களை நிரப்புவதற்காக கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு மற்றும் பொது அறிவுத் தேர்வினை 51,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் எழுதியுள்ளனர். முன்னதாக, ஜனவரி 12ஆம் தேதி குரூப் 2  மற்றும் குரூப் 2/A தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்த நிலையில், நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு தேர்வு முடிவுகள் இன்று (ஜன.11) வெளியாகியுள்ளன.

முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீதிமன்றத்தில் ஆஜர்..!

தேர்வு எழுதியவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இதற்கிடையில், கடந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 13,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. முன்னதாக, குரூப் 2 பணியிடங்களில் 5,413ஆக இருந்த நிலையில், 738 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்பொழுது 6,151 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்