அதிமுகவின் நம்பிக்கை துரோகி ஓபிஎஸ் – ஜெயக்குமார்
அதிமுக பெயர், கொடி, சின்னம் மற்றும் லெட்டர்பேடு உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தனி நீதிபதி விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியிருந்து. இது, ஓபிஎஸ் தரப்பினருக்கு மேலும் ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. இருப்பினும், இதுதொடர்பாக உரிமை மனு தாக்கல் செய்யலாம் என ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு அறிவுறுத்தியது.
அதிமுக நல்ல இருக்கக்கூடாது, நாசமா போகவேண்டும் என்பது தான் ஓபிஎஸ்-யின் நோக்கம். அதை தான் செய்துகொண்டு இருக்கிறார் எனவும் இபிஎஸ் தரப்பினர் விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் செய்தியாளர் சந்திப்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக பெயர், கட்சி கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓபிஎஸ்-க்கு தடை தொடரும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. நியாயமான ஒரு நல்ல தீர்ப்பை நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது.
ஓபிஎஸ்-க்கு விதித்த தடை செல்லும் – ஐகோர்ட் தீர்ப்பு
தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் மன உளைச்சலலுக்கு ஆளாகும் வகையில் குழப்பத்தை ஏற்படுத்தி குளிர்காய நினைக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தகுந்த தண்டனையை இறைவனே வழங்கியுள்ளார் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை தலை விரித்து ஆடுகிறது.
வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளில் அதிமுக தான் மாபெரும் வெற்றி பெறும். திமுகவுக்கு மக்கள் எண்ட் கார்டு போடுவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அழைப்பு வந்துள்ளது, பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து கட்சி தலைமை முடிவு செய்யும் என்றார்.