விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு…!

அதிமுக ஆட்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது கடந்த 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்  லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

பின்னர்,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் தலா 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டு சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழங்கிய குற்றப்பத்திரிகையில் ஒரு சில நகல்கள் விடுபட்டுள்ளதாக விஜயபாஸ்கர் தரப்பு  தெரிவித்தனர். விடுபட்ட நகல்களை ஒப்படைக்க லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ராமர் கோயில் திறப்பு விழா… எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புறக்கணிப்பு!

இதைத்தொடர்ந்து,  கடந்த டிசம்பர் 2-ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார்  விடுபட்ட நகல்களுடன் 17,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அவர்கள் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை நகல்களை விஜயபாஸ்கர் தரப்பிடம் நீதிமன்றம் ஒப்படைத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது. கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி நீதிமன்றத்தில் ஆஜராகாத நிலையில் வழக்கு விசாரணையை ஜனவரி 6-ம் தேதிக்கு நீதிபதி பூரண ஜெய் ஆனந்த் ஒத்திவைத்தார்.

OPS தரப்பு வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை – இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

பின்னர் கடந்த ஜனவரி 6-ம் தேதி நீதிமன்றத்தில் விஜயபாஸ்கர் ஆஜரானார். அப்போது வழக்கை விசாரித்த  நீதிபதி வழக்கை மீண்டும் வரும் ஜனவரி 11-ம் தேதி (அதாவது இன்று)  ஒத்திவைத்தார். இந்நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்த போது வழக்கில் சி.விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை இதைதொடர்ந்து, வழக்கை வரும் ஜனவரி 31-ம் தேதிக்கு ஒத்திவைத்து புதுக்கோட்டை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்