ராமர் கோயில் திறப்பு விழா… எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புறக்கணிப்பு!
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது.
அதன்படி, இந்த திறப்பு விழாவில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உட்பட பலர் வருகை தர உள்ளனர். இந்த சூழலில், ராமர் கோயில் திறப்பு விழாவை இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். தேர்தல் நெருங்குவதால் கட்டி முடிக்கப்படாத கோயிலை பாஜக திறக்கிறது. மதத்தை வைத்து பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்யும் அரசியல் செய்கிறது என விமர்சித்து விழாவை புறக்கணித்து வருகின்றனர்.
ராமர் கோயில் திறப்பு விழா – சோனியா காந்தி, கார்கே நிராகரிப்பு!
அதன்படி, ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக காங்கிரஸ், மார்க்சிஸ்ட், சமாஜ்வாதி அறிவித்த நிலையில், பிற கட்சிகளும் பங்கேற்காது என தகவல் வெளியாகியுள்ளது. கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பை சோனியா காந்தி, கார்கே உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களும் நிராகரித்துள்ளனர்.
ராமர் கோயில் திறப்பு என்பது ஆன்மிக விழா அல்ல, பாஜக, ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்துள்ள அரசியல் விழா என விமர்சனம் செய்துள்ளனர். ராமர் கோயில் திறப்பு விழா அரசியல் நாடகம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே விமர்சனம் செய்திருந்த நிலையில், கட்டிமுடிக்காத ராமர் கோயிலை தேர்தல் லாபத்துக்காக முன்கூட்டியே திறப்பதாக பல சங்கராச்சாரியார்கள் குற்றசாட்டியுள்ளனர். இதனால் தற்போது தொடர்ந்து ராமர் கோயில் திறப்பு விழாவை இந்தியா கூட்டணிகளை சேர்ந்த கட்சிகள் புறக்கணித்து வருகின்றனர்.