ராமர் கோயில் திறப்பு விழா – சோனியா காந்தி, கார்கே நிராகரிப்பு!
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் மற்றும் கோயில் திறப்பு விழா ஜனவரி 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த பிரம்மாண்ட திறப்பு விழாவுக்கான இறுதிக்கட்ட ஆயத்த பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா சார்பில் பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திறப்பு விழாவில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், பொதுமக்கள் உட்பட பலர் வருகை தர உள்ளனர். பிரதமர் மோடி ஜனவ.22ம் தேதி ராமர் கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார். ராமர் கோயில் திறப்பு விழாவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை 2.O.! அனுமதி மறுத்த மாநில அரசு.?
இந்த நிலையில், ஜனவரி 22ம் தேதி அயோத்தியில் நடைபெறும் ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் சோனியா காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா ஆகியோருக்கும் அழைப்பிதழ் வழங்கப்பட்டது. ஆனால், விழாவில் பங்கேற்பது தொடர்பாக அறிவிக்கப்படாமல் இருந்தனர்.
தற்போது, ராமர் கோயில் திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிக்கையில், ஆர்எஸ்எஸ், பாஜக நிகழ்ச்சிக்கான அழைப்பை காங்கிரஸ் நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்டி முடிக்கப்படாத கோயிலை பாஜக திறக்கிறது. மதம் என்பது தனிப்பட்ட விஷயம், அதனை பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்யும் அரசியல் ஆக்கியுள்ளார்கள் என்றுள்ளனர்.