பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை – நடிகை நயன்தாரா அட்வைஸ்!
கடந்த ஆண்டு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் ‘9 ஸ்கின்’ (9 Skin) என்ற அழகு சாதனபொருட்கள் விற்கும் நிறுவனத்தை தொடங்கினார்கள். இந்த நிறுவனத்தில் இருந்து ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை கொண்டு வந்த நிலையில், அது நல்ல வரவேற்பை பெற்றதால் அதற்கு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் வெற்றி விழா நடத்தினார்கள்.
அந்த விழாவில் பேசிய நடிகை நயன்தாரா “பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் சமூகமும் நல்லா இருக்கும் . உடல் நலம் குறித்து பெண்களுக்கு அதிகமான விழிப்புணர்வு தேவைப்படுகிறது.மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு நம் நாட்டு பெண்களுக்கு முழுமையாக சென்றடையவில்லை என்று தான் சொல்வேன்.
விக்ரமுக்கு அந்த மாதிரி நடிக்கவே தெரியாது! பரபரப்பை கிளப்பிய ராஜகுமாரன்!
இதற்கு முன்னாடி எந்த சானிட்டரி நாப்கினுடைய பெயரையும் நாம் சொன்னது கிடையாது. பெரிதாக நான் சொல்லியும் பார்த்தது இல்லை. ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் ஒரு மேடையில் கூட பல ஆண்கள், நிறைய பெண்கள் இருக்கும் ஒரு இடத்தில் கூட சானிட்டரி நாப்கின் என்று வெளிப்படையாக சொல்கிறோம். அதுவே எவ்வளவு பெரிய மாற்றம்” என கூறியுள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய நடிகை நயன்தாரா ” சந்தோஷமாக உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கு பின்னாலும், கண்டிப்பாக ஒரு ஆண் இருக்கிறார்கள். எனக்கு பின்னல் என்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் இருக்கிறார். நானும் அவரும் சந்தித்ததில் இருந்து இன்னும் மிகப்பெரிய விஷயங்களை செய்ய வேண்டும் என்றுதான் எனக்கு கற்றுக்கொடுத்துள்ளார். என்றுமே ‘ஏன் இதை செய்கிறீர்கள்’ என கேட்டதில்லை. என்னுடைய பெரிய பலம் அவர்தான்” எனவும் நடிகை நயன்தாரா தெரிவித்துள்ளார்.