ஏசியன்ஸ் கேம்ஸ் : இந்தியாவுக்கு இதுவரை 59 பதக்கங்கள்..!!!
இந்தோனேசியாவில் நடைபெறும் 18வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை 59 பதக்கங்களை வென்றுள்ளது. 13 தங்கப்பதக்கங்கள், 21 வெள்ளி பதக்கங்கள், மற்றும் 25 வெண்கலப் பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது இந்தியா. இப்பட்டியலில், மொத்தம் 242 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்திலும், 175 பதக்கங்களுடன் ஜப்பான் அடுத்த இடத்திலும் நீடிக்கின்றன.