பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று காலை தொடங்கி வைக்கும் முதல்வர்.!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து பொதுமக்களும் சிறப்பாக கொண்டாட வேண்டும் என வருடந்தோறும் தமிழக அரசு சார்பில் பச்சரிசி, சர்க்கரை உள்ளடக்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழு கரும்புடன் சேர்த்து ரூ.1000 ரொக்க பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு நியாயவிலை கடைகள் மூலம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்பொழுது ரூ.1,000 வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பை இன்று (10.01.2024) சென்னை ஆழ்வார் பேட்டையில் காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முன்னதாக, அரசு ஊழியர்கள், வருமானவரி செலுத்துவோர், சக்கரை மற்றும் பொருளில்லா அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கம் கிடையாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
பின்னர், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்க பணத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்க பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நேற்று தமிழக அரசு அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று முதல் 13-ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பினை ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.