சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ்.. முதலமைச்சர் அறிவிப்பு
சென்னை தலைமை செயலகத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் கிறிஸ்தவ தேவாலய தலைவர்கள் மற்றும் போதகரர்களுடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், முத்துசாமி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது முதலமைச்சர் பேசியதாவது, சிறுபான்மையினர் நலனில் தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்படுகிறது. கிறிஸ்துவர்களாக மாறிய ஆதிதிராவிட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி நிறுவனங்களுக்கு மதச்சார்பு சிறுபான்மையினர் சான்றிதழ் நிரந்தரமாக வழங்கப்படும் என அறிவித்தார்.
தற்போது 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும் சான்றிதழ் இனி நிரந்தரமாக வழங்கப்படும். அதன்படி, கல்வி நிறுவனங்களுக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து சான்றிதழ் பெறுவதற்கு இணைய வழியில் விண்ணப்பித்து சான்றிதழ் பெற்றுக் கொள்வதற்கான Web Portal இந்த மாதத்திற்குள் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும். அரசுசாரா தொண்டு நிறுவனங்களை பதிவு செய்தல், மானியம் பெறும் நடைமுறைகள் எளிதாக்கப்படும்.
தேர்தல் டெபாசிட் தொகை.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
சிறும்பான்மையினர் கல்லூரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 மாதங்களுக்குள் அங்கீகாரம் வழங்கப்படும் என்றும் சிறும்பான்மை பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு வயதை 58-ஆக உயர்த்த பரிசீலினை செய்யப்படும் என தெரிவித்தார். மேலும், கிராமப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் சிறும்பான்மையினர் பள்ளிகளில் காலை உணவு திட்டம் கொண்டுவர நிதிநிலை அறிக்கையில் பரிசீலினை செய்யப்படும்.
வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி, புனரமைப்பு பணிக்கான இடர்பாடுகளை களைய குழு அமைக்கப்படும். யுஜிசி விதிகளுக்கு உட்பட்டு தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு 3 மாதத்துக்குள் நியமனம் அங்கீகாரம் வழங்கப்படும். அரசின் நிதியுதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் சேர்த்தல் குறித்து நல்ல செய்தி வெளிவரும் என்றும் தெரிவித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்கள் தலைமையில், நடைபெற்ற சிறுபான்மையினர் நலன் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆற்றிய உரை.
(1/3)#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @katpadidmk @KKSSRR_DMK @Udhaystalin @mp_saminathan @GingeeMasthan @Chief_Secy_TN pic.twitter.com/WDGw0SRIZf— TN DIPR (@TNDIPRNEWS) January 9, 2024