நான் கொல்ல வில்லை..!! சாத்தன் தான் கொன்றது கொலைகாரன் பரபரப்பு வாக்குமூலம்..
சென்னை,
சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் செய்யது பஸ்ருதீன் (வயது 63). இவர் மாந்திரீகம் செய்வதோடு குறிசொல்லும் தொழிலும் செய்து வந்தார். சென்னை திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள கட்டிடத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு அவர் குறி சொல்லிக்கொண்டு இருந்தார்.
அப்போது பர்தா அணிந்திருந்த பெண் ஒருவர் திடீரென ஒரு மர்மப்பொருளை செய்யது பஸ்ருதீன் மீது வீசினார். அந்த பொருள் பட்டதும், உடல் முழுக்க தீப்பிடித்து எரிந்தது. இதில் தீயில் கருகி அவர் இறந்தார். உடனே அந்த பெண் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணை தேடி வந்தனர். விசாரணையில் மந்திரவாதியை கொலை செய்த பெண் சென்னை ஜாம்பஜார் அங்கமுத்து தெருவை சேர்ந்த நபீன்தாஜ் (40) என்பது தெரியவந்தது. அவரது கணவர் ராயப்பேட்டையில் பர்னிச்சர் கடை வைத்துள்ளார். அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இந்த நிலையில் மந்திரவாதியை எரித்துக்கொன்ற நபீன்தாஜ் நேற்று முன்தினம் இரவு பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல பேசினார். இதனையடுத்து நபீன்தாஜை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்
இதற்கிடையே மனநல மருத்துவமனைக்கு நேற்று போலீசார் சென்று நபீன்தாஜிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையின்போது, நபீன்தாஜ் போலீசாரிடம் நன்றாக பேசியதாக தெரிகிறது. ‘என் மீது சாத்தானை ஏவிவிட்டதால், கொலை நடந்தது’ என்று அந்த பெண், போலீசாரிடம் கூறியதாக தெரியவந்துள்ளது.
DINASUVADU