தேசிய விளையாட்டு விருதுகள் விழா – முகமது ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது!

ArjunaAwards

2023-ஆம் ஆண்டிற்கான மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருது உள்ளிட்ட தேசிய விருதுகளை பெறும் இந்திய விளையாட்டு வீரர்களின் பெயர் பட்டியல் கடந்த டிசம்பர் 20ம் தேதி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டது.

மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகத்தால், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் அர்ஜுனா விருதுக்கான வீரர்கள் பட்டியலில், கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்டோர் பெயர் இடம்பெற்றிருந்தது.

பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளில்  26 வீரர்களுக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டன. இதுபோன்று, வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் 3 பயிற்சியாளர்களுக்கும், தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகியோருக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா இந்திய மகளிர் அணி?

இந்த விருதுகள் எல்லாம் இன்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தேசிய விளையாட்டு விருதுகளை வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்று வருகிறது. அதன்படி, டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, இந்திய விளையாட்டு வீரர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறார்.

அப்போது, இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலிக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. மேலும், சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி (பேட்மிண்டன்)ஆகியோருக்கு மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இதுபோன்று, பல்வேறு பிரிவுகளின் கீழ் விளையாட்டு வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்