கனமழை எதிரொலி: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வு மறுதேதி அறிவிப்பு.!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
குறிப்பாக, நேற்று மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருவாரூர், செங்கல்பட்டு, கடலூர், நாகப்பட்டினம், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில், தொடர் கனமழை பெய்த மாவட்டங்களில் நேற்றைய தினம் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதேபோல், கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. அதே போல், நேற்று நடைபெற இருந்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தொடர் மழை : சிதம்பரம் பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு!
மேலும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளின் மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தேர்வுகள் 11ம் தேதி நடைபெறும் என பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேல் தகவல் தெரிவித்துள்ளார்.