கனமழை: கடலூரில் பெய்த 130 ஆண்டுகளில் இல்லாத மழை!
தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக, டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில், கடலூரில் ஜனவரி மாதத்தில் பெய்த மழை நிலவரப்படி, கடந்த 130 ஆண்டுகளில் இல்லாத அளவாக தற்போது 13.6 செ.மீ. மழை பதிவக்கியுள்ளது. வரலாற்றில் இது 3வது அதிகபட்ச மழை என்றும், இதற்கு முன்பு 19.7 செ.மீ. மற்றும் 15.3 செ.மீட்டர் மழை என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு தொடர் மழை காரணமாக, ராணுவ ஆள்சேர்ப்பு முகாமிற்காக போடப்பட்ட கூடாரம் சரிந்து விழுந்துள்ளது. ஏற்கனவே, இன்று கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தாமிரபரணி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை! – நெல்லை ஆட்சியர்
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.