அஜித் படத்தில் நடிக்க மறுத்த அருண்விஜய்! காரணம் என்ன தெரியுமா ?

Arun Vijay Vidaa Muyarchi

நடிகர் அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்து வருகிறார். அர்ஜுன், ரெஜினா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்த வருகிறார்கள்.

இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம்  தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார் . படத்திற்கான  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாஷ் பிறந்தநாளுக்கு பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 3 பேர் பலி!

இந்த திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிக்க முதலில் நடிகர் அருண் விஜயிடம் தான் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால் சில காரணங்களால் அருண் விஜய் இந்த திரைப்படத்தில் நடிக்காமல் மறுப்பு தெரிவித்து விட்டார்.

இந்த நிலையில் எதற்காக திரைப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தேன் என அருண் விஜய் அதற்கான காரணத்தை சமீபத்திய பேட்டி ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியா அவர் எனக்கு விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது ஆனால் என்னால் நடிக்க முடியவில்லை.

ஏனென்றால் நான் வணங்கான் திரைப்படத்தின் கெட்டப்பில் இருந்தேன். எனவே,  வணங்கான் படத்தின் பாதி கட்டப்பட படப்பிடிப்பு  முடிந்துள்ள நிலையில், என்னால் அந்த படத்தில் கவனம் செலுத்த முடியவில்லை அதனால் படத்தில் நடிக்க மறுத்து விட்டேன்” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே அருண் விஜய் அஜித்திற்கு வில்லனாக என்னை அறிந்தால் படத்தில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்