தமிழகத்திலேயே சீர்காழியில் அதிகளவாக 24 செமீ அதி கனமழை!
தென்மேற்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. முதலில் வட மாவட்டங்களில் கனமழை பெய்த நிலையில், அடுத்து தென் மாவட்டங்களை தாக்கியது. தற்போது டெல்டா மாவட்டங்களில் நேற்று முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.
அதன்படி, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 5 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. அதன்படி, சீர்காழி, சிதம்பரம், நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர் அதி கனமழை பெய்துள்ளது.
ஆரஞ்சு அலர்ட்! தமிழகத்தின் 8 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு!
அதன்படி, தமிழ்நாட்டிலேயே கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 24 செமீ அதி கனமழை பதிவாகியுள்ளது. சீர்காழிக்கு அடுத்தபடியாக சிதம்பரத்தில் 23 செமீ மழை பெய்துள்ளது. இதனைத்தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்டம்வேளாங்கண்ணியில் 22 செமீ, திருவாரூர், நாகையில் தலா 21 செமீ, கொள்ளிடம், புவனகிரியில் 19 செமீ மழை பதிவாகியுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 5 இடங்களில் அதி கனமழை பதிவாகியுள்ளது. அதன்படி, சீர்காழி, சிதம்பரம், நாகை, வேளாங்கண்ணி, திருவாரூர் அதி கனமழை பெய்துள்ளது. இதுபோன்று, தமிழகத்தில் 17 இடங்களில் மிக கனமழை மற்றும் 56 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் மழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) January 8, 2024